BREAKING NEWS
Search
நடிகர் கருணாஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பு

நடிகர் கருணாஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பு.!

510

நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார். இவர் கதிராமங்கல மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் அவர் கதிராமங்கல போராட்டத்திற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாம செய்ய தயார் என கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் கூவத்தூர் விடுதியில் சசிகலா அணி உடன் இருந்தார் .இதனால் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதனையடுத்து கூவத்தூர் விடுதியில் கருணாஸ் அதிகம் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் இரண்டு நபரின் பெயர்களும் அடிப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக செயல் பட ஆரம்பித்தனர்.

இதனையடுத்து கதிராமங்கலத்தில் நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களை எம்எல்ஏ கருணாஸ் தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் சந்தித்து பேசினர். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் நெடுவாசல்,கதிராமங்கல்ம் போன்ற பிரச்சனை வந்திருக்காது என்று கூறினார்.

மேலும் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளதாக அதிரடியாக கருணாஸ் கூறியுள்ளார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *