BREAKING NEWS
Search
9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து மெக்கானிக் செய்த காரியம்!

9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து செய்த காரியம்.!

530

சேலம் மாவட்டம் ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது கடைக்கும் எதிர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு அவர் திடீரென சாக்லெட் வாங்கி கொடுத்து மடியில் உட்கார வைத்துள்ளதை அந்த சிறுமியின் சகோதரி பார்த்துள்ளார். இதை அவரது தயாரிடம் சென்று கூறியுள்ளார். இதனால் சற்று சந்தேகம் எழுந்த அந்த தாய் வெளியே வந்து மெக்கானி கடையை பார்த்துள்ளார். அங்கு தியாகராஜனும் இல்லை அந்த சிறுமியும் இல்லை. சந்தேகம் இன்னும் பலமாகியதால் அவசர அவசரமாக மெக்கானிக் கடை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு அந்த அதிர்ச்சியான காட்சியை பார்த்து கதறி சத்தம் எழுப்பியுள்ளார் அந்த சிறுமியின் தாய். இந்த கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதன்பின் தியாகராஜன் மாடியிலிருந்து பின் வழியே ஓடிவிட்டாராம்.

இந்நிலையில் தியாகராஜன் சிறுமியின் உதட்டை கடித்ததில் சிறுமிக்கு உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *