BREAKING NEWS
Search

விவேகம் திரைவிமர்சனம் (2.5/5)

613

வெளியான தேதி-24-08-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 29 நிமிடம் சென்சார் ரேடிங் – U/A

படக்குழு
கதை திரைக்கதை,வசனம்,இயக்கம்-சிவா
தயாரிப்பு – சத்யா ஜோதி பில்ம்ஸ்
நடிகர்கள் – அஜித் குமார்,காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன்,விவேக் ஓபிராய்.
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – வெற்றி
எடிட்டிங்-ரூபன்
கலை-மிலன்

இந்த படம் எப்படி பட்டது

உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கும் தீவிரவாதிகளுக்கும் அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் ரகசிய உளவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமே விவேகம்.விவேகமாக செயல்பட்டது யார் என்று பாப்போம் வாருங்கள்.

கதை

இந்த படத்தில் மிகவும் திறமையான ரகசிய உளவாளியாக இருப்பவர் AK என்று அழைக்கப்படும் அஜய் குமார்(அஜித் குமார்) அவரின் மனைவி யாழினி(காஜல் அகர்வால்).தீவிரவாத கூட்டம் மனிதனால் உருவாக்கபட்ட அணு ஆயுதம் கொண்டு உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தி அப்பாவி மக்களை கொள்கிறார்கள்.அஜித் இதனை கண்டுபிடித்து தடுக்கிறார்.எனவே கர்ப்பிணியாக இருக்கும் அவர் மனைவி காஜலை வைத்து அஜித்திற்கு கேட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்.இதனால் அஜித்தை குற்றவாளியாக நினைக்கிறது உளவுத்துறை.அவரை பிடிப்பதற்கு அவரின் நண்பர்களான ஆர்யன் சிங்கா(விவேக் ஓபிராய்),மைக்(செர்ஜ் க்ரோசன்)மற்றும் சிலரை நியமிக்கிறது.இதன் பின் அவர் தன்னை எப்படி நிரூபிக்கிறார்,தன் மனைவியை எவ்வாறு காப்பாற்றுகிறார்,தன் எதிரிகளை எப்படி வெல்கிறார் என்பதை த்ரில்லிங் கலந்த ஆக்ஷனுடன் சொல்லியிருக்கும் படமே விவேகம்.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படம் ஒரு முழு ஆக்ஷன் படம்.இயக்குனர் சிவாவிற்கு இது மூன்றாவது படம் ஏற்கனவே இவர் அஜித்தை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த படம் முற்றிலும் வேறுபாடானது.இது உலக நாடுகளுக்கு அச்சுருத்தாக இருக்கும் தீவிரவாதம் பற்றிய படம், முற்றிலும் ஆக்ஷன் நிறைந்திருக்கிறது.கணவன் மனைவி செண்டிமெண்டும் உள்ளது.பெரும் பொருள் செலவில் உருவாகியிருக்கும் இப்படம் மிகவும் பிரம்மானடமாக ஆங்கில படத்திற்கு நிகராக உள்ளது.அதற்கு சத்யா ஜோதி பில்ம்சஸ்குதான் நன்றி சொல்ல வேண்டும்.இப்படத்தில் அஜித்திற்கு ஒரு மாறுபாட்ட வேடம் அதை அவர் மிகவும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார் அவர் தன் உடலையும் இப்படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி இருக்கிறார்.படம் முழுவதும் அஜித்தே நிறைந்து இருக்கிறார் அவர் ரசிகர்களுக்கு இந்த நிச்சயம் ஒரு நல்ல விருந்தே.அஜித் மற்றும் விவேக் ஓபராய் நட்பு காட்சிகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக அமைத்திருக்கலாம்.இப்படத்தில் மாமுலான ஆக்ஷன் படத்தில் வருவது போல ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே பூனை எலி விளையாட்டு மற்றும் திருடன் போலிஸ் விளையாட்டு என்றாலும் இப்படத்தில் இயக்குனர் சிவா அதை சற்று வித்யாசமாக சொல்லியிருக்கிறார்.படத்தில் முன்பாதியை விட பின்பாதி மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. என்ன ஒன்று இயக்குனர் கதையிலும் திரைகதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்தில் மிகவும் சொல்லவேண்டிய விஷயம் மிலனின் கலையே. ஐரோப்பா நாடுகளை நம் கண் முன்னே அழகாக காட்டியுள்ளார்.வெற்றியின் ஒளிப்பதிவு மிகவும் அருமை.அனிருத்தின் இசையில் பாடல்கள் அருமை.பின்னணி இசை மிகவும் அழுத்தம்மாகவும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தகுந்தபடியும் உள்ளது.

நடிகர்களும் பங்களிப்பு

நடிகர் அஜித்குமார் இப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்து ஆக்ஷனில் பின்னி இருக்கிறார். கணவன் மனைவி ரோமன்சிலும் செண்டிமென்ட்டிலும் தன் நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்கிறார்.மாஸான ஹீரோவாக தன் ரசிகர்ளுக்கு நல்ல விருந்தளித்துள்ளார்.காஜல் அகர்வால் ஒரு மனைவியாக குடும்ப பாங்கான பெண்ணாகவும் கர்நாடிக் இசை பாடுபவராகவும் வந்து தன் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.வேவக் ஒபேரை அஜித்தின் நண்பராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அவரின் நடை,உடை ,பாவனை அனைத்தும் ஸ்டைலாக உள்ளது.கருணாகரன் தன் பங்கு நடிப்பை நன்றாக நடித்துள்ளார்.அக்ஷரா ஹாசன் திரையில் கொஞ்ச காட்சிகளே வந்தாலும் முக்கிய வேடம், நன்றாக நடித்துள்ளார்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.அஜித்தின் நடிப்பு
2.படத்தின் பிரம்மாண்டம்
3.கலை

படத்திற்கு பலவீனம் தருவது

1.முன்பாதி திரைகதை
2.அழுத்தமான கதை இல்லை



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *