BREAKING NEWS
Search

புரியாத புதிர் திரைவிமர்சனம்

302

வெளியான தேதி-01-09-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 2 நிமிடம்
சென்சார் ரேடிங் – U

படக்குழு

கதை திரைக்கதை,இயக்கம்-ரஞ்சித் ஜெயக்கொடி
தயாரிப்பு – தீபன் பூபதி,ரடேஷ் வேலு
நடிகர்கள் – விஜய் சேதுபதி,காயத்ரி,ரமேஷ் திலக்.அர்ஜுனன்,
இசை – சாம்.C.S
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டிங்-பவன் ஸ்ரீகுமார்
வசனம்-கிரீஸ் சிதம்பரம்

இந்த படம் எப்படி பட்டது

வளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு ஒரு சில சாதகங்களும் வெகு பல பாதகங்களும் உள்ளன. இப்படம் டெக்னாலஜியால் ஏற்படும் பாதகத்தால் ஒருவர் படும் துன்பத்தை எடுத்துரைக்கிறது.புரியாத புதிர் என்னவென்று பார்ப்போமா

கதை

இந்த படத்தில் விஜய் சேதுபதி(கதிர்) ஒரு இசையமைப்பாளர் இசை கருவிகள் விற்கும் கடை வைத்திருக்கிறார்.படத்தின் நாயகி காயத்ரி(மீரா) இசை கற்று கொடுக்கும் டீச்சர் இருவரும் ஒரு சில சந்திப்புகளுக்கு பின் காதலிக்கிறார்கள்.விஜய சேதுபதிக்கு இரு நண்பர்கள் உள்ளனர் ஒருவர் ஒரு பப்பில் டீஜே வாக உள்ளார் மற்றொருவர் ஒரு தொலைகாட்சி சேனலில் வேலை செய்கிறார்.டிவி சேனலில் வேலை பார்க்கும் நண்பருக்கும் அந்த சேனல் தலைமை அதிகாரியின் மனைவிக்கும் கள்ள தொடர்பு இருப்பதை யாரோ முகநூலில் ஏற்றி இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த தலைமை அதிகாரி அவரை வேலையை விட்டு துரத்துகிறார் .இதனால் மனமொடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் நண்பர்.இதே போல் காயத்ரி பற்றிய தவறான புகைப்படங்கள் ரெண்டு மூன்று விஜய சேதுபதியின் தலைபேசிக்கு வருகிறது. இதை கண்டு ஆதரிச்சி அடைந்த விஜய சேதிபதி இதையெல்லாம் செய்வது யார் என்று புரியாமல் தவிக்கிறார் தேடுகிறார்.புதிர் போட்டவன் யார் என்று புரியாமல் தேடும் விஜய சேதுபதிக்கு விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கி இருக்கிறார்.முதல் படமே ரொமாண்டிக் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். விக்ரம் வேதா வெற்றியை தொடர்ந்து விஜய சேதுபதியின் அடுத்த படம் இது.முதலில் படத்திற்கு மெல்லிசை என்றே தலைப்பு வைத்திருந்தனர் பின் படம் மிகவும் த்ரில்லிங்காக இருக்கவும் பெயரை புரியாத புதிர் என்று மாற்றியுள்ளனர்.படத்தின் முன்பாதி ரொமான்ஸ், பாடல்கள் என்று நகர்கிறது.பின்பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு இருக்கறது.படத்தின் திரைகதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.படத்தில் ரொமண்டிக் காட்சிகள் நன்றாக வந்துள்ளன.விஜய சேதுபதியின் நடிப்பு சொல்லவே வேண்டாம் படத்திற்கு கூடுதல் பலமே அவர்தான்.இந்த டெக்னாலஜி யுகத்தில் அதை தவறாக பயன்படுத்துகிரவர்களால் என்னென்ன பாதிப்புகள் ஒருவருக்கு ஏற்படுதுங்கறதை இயக்குனர் நன்றாக சொல்லியிருக்கிறார். இந்த படம் பிற்பகுதி சுவரசியமாக இருக்கிறது.இது ஒரு நல்ல த்ரில்லர் படம்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்தில் சாம்.CS இசையில் பாடல்கள் கொஞ்சம் பரவாஇல்லை.ஆனால் பின்னணி இசை மிகவும் அருமை படத்தின் விறுவிறுப்பு காட்சிகளில் பின்னணி இசை நன்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது.எடிட்டிங்கும் நன்றாக பொருந்தியுள்ளது.

நடிகர்களும் பங்களிப்பு

விஜய சேதுபதி தனக்கு கொடுத்திருக்கும் கேரக்டரை திறம்பட செய்துள்ளார்.படத்திற்கு தேவை ஆன அளவு நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.காயத்ரி ஒரு ம்யுசிக் டீச்சராக நடித்துள்ளார் இருவரும் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவர் பங்குக்கு தன் நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர் நண்பராக ரமேஷ் சில காட்சிகளே வந்தாலும் முக்கிய வேடம் நன்றாக நடித்துள்ளார்.மற்றும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.விஜய சேதுபதியின் நடிப்பு
2.பின்னணி இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1.திரைகதையில் சுவரசியமின்மை
2.படைத்திருக்கு ஒட்டாத ஒரு சில காட்சிகள்

ஒருவரி செய்தி – புரியாத புதிர் டெக்னாலஜி பீதியை கிளப்புகிறது.

ரேடிங்- 2.75/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *