BREAKING NEWS
Search

கதாநாய்கான் திரைவிமர்சனம் (2.5/5)

298

வெளியான தேதி-08-09-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 1 நிமிடம்
சென்சார் ரேடிங் – U

படக்குழு

கதை திரைக்கதை,இயக்கம் – முருகானந்தம் (புதுமுகம்)
தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் விஷ்ணு விஷால், கேத்தரின் தெரசா, விஜயசேதுபதி, ஆனந்தராஜ், சூரி, ராஜேந்திரன்.
இசை – சீன் ரோல்டன்

இந்த படம் எப்படி பட்டது

ஒருவர் வாழ்வில் நடக்கும் ஒரு சின்ன தவறுகூட பெரிய விளைவை ஏற்படுத்தி விடும் என்பதை காமெடியுடன் சேர்த்து காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கும் படமே கதாநாயகன்.

கதை

இந்த படத்தில் நாயகன் விஷ்ணு விஷால்( தம்பிதுரை) வருவாய்த்துறை அலுவலராக பணிபுரிபவர். எதற்கும் பயந்தவர் ஆனால் சரக்கு உள்ளே போனால் மட்டும் தவறை தட்டி கேட்டு ரவுடிகளை புரட்டி எடுப்பவர். நாயகி கேதரின் தெரசா (கண்மணி), விஷ்ணு விஷாலுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் கேத்ரின் தெரசாவின் தந்தை இவர்கள் காதலை எதிர்கிறார். அநியாயத்தை தட்டி கேட்டு அடிப்பவன் ஆம்பளை இல்ல, அநியாயத்தை தட்டி கேட்டு அடி வாங்குபவனும் ஆம்பளதான். என் பொண்ணுக்கு அப்படி ஒரு ஆம்பளதான் புருஷனாக வரனும்னு கேத்ரின் அப்பா கூறிவிடுகிறார்.

இதற்கிடையில் விஷ்ணுவிற்கு உயிர்கொல்லும் அரிய நோய் ஒன்று இருப்பதாக மெடிக்கல் ரிப்போர்ட் மூலம் தெரிய வருகிறது. இதனால் தனது தங்கையின் வாழ்கைக்காக தன் கிட்னியை 50 லட்சம் ரூபாய்க்கு விற்க தயாராகிறார் விஷ்ணு. அந்த ரிப்போர்ட் உண்மைதானா ,கிட்னியை கொடுத்தாரா, காதலியை கரம் பிடித்தாரா என்கிற கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து விடை சொல்லியிருப்பதே படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தை நடிகர் கம் புதுமுக இயக்குனரான முருகானந்தம் இயக்கி இருக்கிறார். விஷ்ணு விஷால் ஏற்கனவே தான் தயாரித்து நடித்த படம் ‘வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன்’ கமர்ஷியலாக சூப்பர் ஹிட் ஆனது, அதே பாணியை பின்பற்றியிருக்கிறார் இந்த படத்திலும். படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. விஷ்ணு, சூரி இருவரும் இணைந்து முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார்கள். ஆனந்தராஜும், ராஜேந்திரனும் இரண்டாம் பாதியில் சிரிக்க வைக்கிரார்கள்.

சரண்யா பொன்வண்ணனும் தன் பங்கிற்கு தப்பு தப்பாக ஆங்கிலம் பேசி காமெடி செய்திருக்கிறார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் தோன்றுகிறது மொத்தத்தில் இப்படம் ஒரு நகைச்சுவை விருந்து என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் ஒரே மாதிரியான காமெடி காட்சிகள் நமக்கு பழகிப்போன போனவையே. ஆனால் திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும். விஜய் சேதுபதி முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் அரங்கில் கைதட்டல் பறக்கிறது அவர் ஒரு மாஸ் ஹீரோவாக ஆனதற்கு இதுவே சான்று. படத்தின் முதல்பாதி காதல், பாடல், ஆடல் என்று திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின் படம் சூடு பிடிக்க தொடங்கும்போது டக்குன்னு மீண்டும் மெதுவாகிறது. படத்தில் வரும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பெருசா எதுவும் எதிர்பார்க்காம ஜாலியாக 2 மணி நேரத்தை பொழுதை கழிக்க ஏற்ற படமாக இருக்கிறது கதாநாயகன்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்தில் சீன் ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது ஆனால் அவரது பின்னணி இசை வழக்கம்போல் இல்லாமல் நமக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது.ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

நடிகர்களும் பங்களிப்பு

விஷ்ணு விஷாலை சுற்றி கதை நகர்கிறது அவரும் தனக்கு பரிச்சியமாகிபோன காமெடியில் கலக்கி இருக்கிறார். செண்டிமேன்டிலும் நன்றாக நடித்திருக்கிறார். கேத்ரின் தெரசா நன்றாக நடித்திருக்கிறார் இருப்பினும் தான் நடித்துள்ள ‘மெட்ராஸ் ‘ படத்தில் வருவது போன்றே இதிலும் பாவனை செய்கிறார் படத்திற்கு தகுந்தபடி நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி அனைவரின் கைதட்டலையும் பெறுகிறார். அவர் நடித்திருக்கும் அந்த 10 நிமிடமும் தியேட்டரில் சிரிப்பு மழை அள்ளுகிறது. ஆனந்தராஜ், சூரி, ராஜேந்திரன் அனைவரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.எதார்த்தமான கதை
2.நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும்.
3.படத்தின் இரண்டாம் பாதி

படத்திற்கு பலவீனம் தருவது

1.திரைக்கதையில் சுவரசியமின்மை
2.அதிக நீளமான நகைச்சுவை காட்சிகள்
3.பின்னணி இசை முக்கியமாக ஹிரோயின் காட்சிகள் வரும்போது… ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா…

ரேடிங்- 2.5/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *