BREAKING NEWS
Search

நெருப்புடா திரைவிமர்சனம் – (3.25/5)

248

வெளியான தேதி-08-09-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 08 நிமிடம்
சென்சார் ரேடிங் – U

படக்குழு

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம் – B.அசோக்குமார்
தயாரிப்பு – விக்ரம் பிரபு, இசக்கி துரை.
நடிகர்கள்- விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, வருண், தினேஷ், ராஜ்குமார், வின்சென்ட் அசோகன், ஆடுகளம் நரேன், ராஜேந்திரன்.
இசை – சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு – RD.ராஜேஷ்குமார்
சண்டை- சூப்பர் சுப்பராயன், திலிப் சுப்பராயன்

இந்த படம் எப்படி பட்டது

தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்பதை கனவாக வைத்துக் கொண்டிருக்கும் ஐந்து நெருக்கமான உயிர் நண்பர்கள் பற்றிய கதை இது. நெருப்புடன் அவர்கள் போரடுவதை பாப்போம் வாருங்கள்.

கதை

இந்த படத்தில் விக்ரம் பிரபு (குரு) அவருடைய நண்பர்களான வருண், தினேஷ், ராஜ்குமார், வின்சென்ட் ஆகியோருடன் சேர்ந்து தீ விபத்துகளில் இருந்து மக்களை மீட்கும் பணியை செய்கிறார்கள். இந்த 5 பேருக்கும் தீயணைப்பு வீரர்களாக வரவேண்டும் என்பது கனவு. நெருப்போடு போராடும் இவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்காக ஒருவர் பழியை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

படம் ஓடி கொஞ்ச நேரம் கழித்தே நமக்கு கதாநாயகி நிக்கி கல்ரானி (வாசுமதி) அறிமுகமாகிறார். விக்ரம் பிரபு நிக்கியை பார்த்த உடனே காதல் வயப்படுகிறார். அவரிம் இந்த காதலை சொல்ல முயலும்போது நிக்கி கல்ரானியே விக்ரம் பிரபுவுக்கு ஐ லவ் யூ சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். தீயணைப்பு வீரர்களாக வரவேண்டும் என்ற கனவு நினைவாகும்போது இந்த 5 நண்பர்களுக்கும் ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையிலிருந்து இவர்கள் எப்படி மீண்டார்கள்? இவர்களின் கனவு என்ன ஆனது? என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தை இயக்கிய B.அசோக்குமார் இப்படத்திற்கு மிகவும் பொருத்தமான பவரான பெயரையே வைத்திருக்கிறார். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த ‘கபாலி’ படத்தில் வந்து செம ஹிட்டான பாடலின் முதல் வார்த்தையான ‘நெருப்புடா’ என்பதை இந்த படத்திற்கு வைத்திருக்கிறார் அது படத்திற்கு கூடுதல் பலம். படமும் அதற்கு ஏற்றாற்போல் அனல் பறக்கிறது.

விக்ரம் பிரபு படத்திற்கு படம் தனது விதயாசமான நடிப்பால் அனைவரின் மனதிலும் முத்திரை பதிக்கிறார். இவர் அறிமுகமான கும்கி படத்தில் இருந்து இப்போது வரை அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஹிட் கொடுத்த படங்களே. இந்த படமும் நிச்சயம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். இயக்குனர் தான் நேரில் பார்த்த சம்பவங்களின் அடிப்படையை வைத்தே கதையை இயக்கி இருகிறார். திரைகதையை மிகவும் விறுவிறுப்பாக அமைத்துள்ளார்.

நண்பர்களின் பாச பிணைப்பு நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. அவர்கள் நெருப்போடு போராடும் காட்சிகள் நம்மை உரைய வைக்கிறது. நடிகர் கமலஹாசன் நடித்த ‘மைகேல் மதன காமராசனுக்கு’ பிறகு தீயணைப்பு வீரர்கள் பற்றிய படம் இது. இந்த படம் தீயணைப்பு வீரர்களுக்கான சமர்ப்பணம் என்றே சொல்ல வேண்டும்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்தில் சீன் ரோல்டனின் பின்னணி இசை மிகவும் அருமை பாடல்களும் நன்றாக உள்ளது. RD ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது. படத்தில் சண்டை காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளது. அதுவும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டை மிகவும் கன்னியமாகவும் எதிரிக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும் அமைத்திருப்பது அருமை.

நடிகர்களும் பங்களிப்பும்

படத்தில் விக்ரம் பிரபு மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். இவர் திறமைக்கு சவாலான கேரக்டர் இது அவர் அதை திறம்பட எதிர்கொண்டிருக்கிறார். நண்பர்களாக வரும் வருண், தினேஷ், ராஜ்குமார், வின்சென்ட் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிக்கி கல்ரானி தனக்கு கொடுத்திருக்கும் வேலையை சிறப்பாக செய்துள்ளார். காமெடி அரசியல்வாதியாகவும், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் நான் கடவுள் ராஜேந்திரன் கலக்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில்தான் ரொம்ப எர்ச்சலாகிறது இவரை பார்க்கையில்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.நடிகர்களின் பங்களிப்பு
2.நெருப்பிலும் சண்டை காட்சியிலும் ஒளிப்பதிவு அருமை
3.பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

படத்திற்கு பலவீனம் தருவது

1.திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு சிறு தவறு

ஒருவரி செய்தி – நெருப்புடா அனைவர் மனதிலும் பற்றிக் கொள்பவன்



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *