BREAKING NEWS
Search

துப்பறிவாளன் திரைவிமர்சனம் – (3.25/5)

386

வெளியான தேதி-14-09-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 39 நிமிடம் சென்சார் ரேடிங் – U/A

படக்குழு

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம் – மிஷ்கின்
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி
நடிகர்கள்- விஷால், பிரசன்னா, கே.பாக்யராஜ், வினய், சிம்ரன், ஆண்ட்ரியா, அனு இமானுவேல், ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், ஜான் விஜய்
இசை – ஆரல் கரோலி
ஒளிப்பதிவு – கார்த்திக்

இந்த படம் எப்படி பட்டது

இந்த படம் ஒரு அக்ஷன் த்ரில்லர் படம்.இப்படதை கொனன் டோயல்சின் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ போன்ற ஆங்கில துப்பறியும் நாவல் பாணியில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.அந்த நாவலில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் கேரக்டர் விஷால் மற்றும் அதில் வரும் Dr.வட்சன் கேரக்டர் பிரசன்னா என்று நினைத்துகொண்டு இவர்கள் எப்படி துப்பரிகிரார்கள் என்று பாப்போம் வாருங்கள்.

கதை

இப்படத்தில் தனியார் டிடெக்டிவ் அதிகாரியாக வருகிறார் நடிகர் விஷால் (கணியன் பூங்குன்றன்) இவரது நண்பராக இவருடன் இணைந்து பனி புரிபவர் நடிகர் பிரசன்னா (மனோ).நடிகை சிம்ரன் (லீலா) தன் கணவரின் பிறந்தநாளை தனது கணவன் மற்றும் மகனுடன் வீட்டு மொட்டை மாடியில் கொண்டாடுகின்றனர்.பிறந்தநாள் கொண்டாடி பரிசுகள் கொடுத்த முடித்த பின்பு மின்னல் தாக்கி அவர் கணவரும் மகனும் இறக்கின்றனர்.இவர்கள் இறந்த காட்சியே படத்தில் ஓப்பனிங் காட்சி. அதன்பின் ஒரு சிறுவன் தனது நாயை யாரோ கொன்றுவிட்டதாகவும் அந்த நாயை கொன்றவர்களை கண்டுபிடித்து தர சொல்லி விஷாலிடம் கேட்கிறார். நாயின் உடம்பில் ஒரு புல்லட் இருப்பதை பார்த்து இந்த கேஸ் வேறுபக்கம் விறுவிறுப்பாக நகர்கிறது. இதே போல் மேலும் சில மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன. கொலைகள் செய்பவன் இவர்களை விட சாமர்த்தியமாக இவர்களிடம் இருந்து தப்பிக்கிறான். இந்த தவறுகளை செய்பவன் யார் எதற்கு இப்படி செய்கிறான் என்று கண்டுபிடிப்பதே படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் இப்படத்தை ஒரு துப்பறியும் நாவல் பாணியில் அமைத்துள்ளார். அப்படி அமைத்திருந்தாலும் தனக்கே உரிய ட்விஸ்ட் அக்ஷன் த்ரில் அனைத்தையும் படத்தில் வைத்திருக்கிறார். என்ன ஒன்று அவர் படத்தில் எமோஷன் காட்சிகள் இருக்கும் இந்த படத்தில் அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது. படத்தின் ஆரம்ப காட்சிகள் சற்று மெதுவாக இருக்கிறது. பின் அடுத்தடுத்த நகர்வுகள் சஸ்பென்சாகவும் திரிலிங்காகவும் உள்ளது. படத்தில் விஷால் தனக்கு கொடுத்திருக்கும் சவாலான கேரக்டரை மிகவும் லாவகமாக செய்திருக்கிறார். பிரசன்னா விஷாலின் நண்பராக விஷாலுக்கு உறுதுணையாக படம் முழுக்க வருகிறார். படத்தில் வரும் கட்டி முடிக்காத அபார்ட்மெண்ட் கட்டிடங்கள், சீன ரெஸ்டாரென்ட், மங்க்ரூவ் காடுகள் போன்ற இடங்கள் ஆங்கில பட பாணியில் உள்ளது. படத்தில் வரும் சண்டை காட்சிகள் குறிப்பாக சீன ரெஸ்டாரண்டில் நடக்கும் சண்டை மிகவும் நன்றாக இருக்கிறது. எதையும் உடைக்காமல் சண்டை போட்டிருகின்றனர். படத்தின் நாயகி அவ்வப்போது வந்து செல்கின்றார் ஆனால் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது படத்தில். படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த படம் விஷால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அக்ஷன் விருந்து.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்திற்கு ஆறல் கரோளினியின் பின்னணி இசை மிகவும் அருமை இப்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரிலலர் படத்துக்கு பலம் சேர்ப்பதே பின்னணி இசைதான். அது நன்றாக உள்ளது. இப்படத்தில் கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் என்றே சொல்லவேண்டும். சண்டை காட்சிகளும் நன்றாக உள்ளது.

நடிகர்களும் பங்களிப்பும்

இப்படத்தில் விஷால் துப்பறிவாளராக நடித்துள்ளார். மிகவும் மாசாக நடித்துள்ளார். பிரசன்னா விஷாலின் நண்பராக நன்றாக நடித்துள்ளார். படத்தின் நாயகி அணு இமானுவேல்(மல்லிகா) ஒரு பிக் பாக்கெட்டாக வருகிறார். படத்தில் சில காட்சிகளே வந்தலும் நன்றாக நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யராஜ் இதுவரை இல்லாத வித்யாசமான முக்கியாமான வேடத்தில் நடித்துள்ளார். வினய் வில்லனாக தனி முத்திரை பதித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சிம்ரன், ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் அனைவரும் படத்தோடு பொருந்தி நன்றாக நடித்துள்ளனர்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.சஸ்பென்சான திரைக்கதை
2.இயக்கம்
3.பின்னணி இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1. ஒரு சில காட்சிகள் புரிய நேரமாகிறது.

ஒருவரி செய்தி – துப்பறிவாளன் விறுவிறுப்பாக இருக்கிறான்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *