BREAKING NEWS
Search

மகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (3.5/5)

523

வெளியான தேதி-15-09-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 20 நிமிடம்
சென்சார் ரேடிங் – U

படக்குழு

கதை திரைக்கதை, இயக்கம், வசனம் – பிரம்மா G
தயாரிப்பு – 2D என்டேர்டைன்மென்ட், க்ரிஸ் பிக்சர்ஸ்.
நடிகர்கள்- ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – மணிகண்டன்
எடிட்டிங் – CS.பிரேம்

இந்த படம் எப்படி பட்டது

இப்படத்தில் திருமணத்திற்கு பின் பெண்களின் நிலை மற்றும் அவர்களின் உள்குமுறல்கள் பற்றி யதார்தமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது இந்த மகளிர் மட்டும். பெண்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும் வகையிலும் இருக்கிறது. மகளிர் மட்டும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாப்போம் வாருங்கள்.

கதை

இப்படம் தொடக்க காட்சியே 1978 ல் தொடங்குகிறது. அதில் மூன்று உயிர்த்தோழிகள் கோமதா, ஷோபனா கார்த்திகேயன் (ராணி அமிர்தகுமாரி), நிவேதிதா சதீஷ்(சுப்புலக்ஷ்மி), ஆகியோர் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் பார்க்க செல்கிறார்கள்.

அங்கே கட் செய்து பின் இப்போது (2017) உள்ள காலத்துக்கு வருகிறது. இங்கே ஊர்வசி (கோமதா) கணவர் இல்லாதவர் தன் மகன் மாதவன் (சுரேந்தர்) வெளிநாட்டில் வேலை செய்கிறான். எனவே ஊர்வசி அவரின் மருமகளான ஜோதிகாவிடம் பள்ளி தோழிகளை பற்றி சொல்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு ஒரு யோசனை வருகிறது. ஜோதிகா ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர். முகநூல் மூலம் அவர்கள் இணைகிறார்கள். இதில் பானுப்ரியா (ராணி) அவர் கணவரான நாசரும் மகனும் அரசியல்வாதிகள் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இருவரும் பானுப்ரியாவை ஒரு பொருட்டாக கருதுவது கிடையாது இதனால் அவருக்கு உள்ளத்தில் வருத்தம். அடுத்து சரண்யா (சுப்பு) ஒரு அழகியல் நிபுணர் தன்மீது விருப்பமில்லாத கணவர் லிவிங்ஸ்டன்னுடன் வாழ்கையை ஓட்டி கொண்டிருக்கிறார். அவரோ தன் பழைய காதல் நினைவில் இருக்கிறார் இவரை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இவர்களை ஜோதிகா மீண்டும் இணைத்து ஒரு மூன்று நாட்கள் நாம் நமக்காக மட்டுமே வாழ்வோம் என்று கூறி வெளியே செல்கிறார்கள். இவர்கள் எங்கே சென்றார்கள் என்ன செய்தார்கள் என்பது, இவர்கள் குடும்பம் இவர்களை புரிந்து கொண்டதா என்பதுதான் படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தின் இயக்குனர் பிரம்மா ஏற்கனவே குற்றம் கடிதல் படம் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர். ஆனால் இந்த படம் அவரின் முந்தய படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட படம். இந்த படம் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்தி அடிமைபோல் வைத்திருப்பதால் பெண்கள் மனதில் ஏற்படும் குமுறல்கள் பற்றியது. இப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கிறார் மிகவும் இளமையாகவும் தெரிகிறார். மற்ற மூன்று சீனியர் நடிகைகளும் நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கிறார்கள். நகைச்சுவைக்கு ஊர்வசி, கலகலப்பிற்கு சரண்யா, எமொஷனுக்கு பானுப்ரியா என்று அசத்தி இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் திறமைகளுக்கு முக்காடு போட்டு மாட்டிக்கொள்ளும் மாயாஜால சிறையே திருமணம் என்று சொல்கிற கருத்து இந்த காலத்து பெண்கள் சிலருக்கும் பொருந்தும். மேலும் ஜோதிகா இப்படத்தில் தான் எடுக்கும் ஆவணப்படத்திற்கு தலைப்பு ‘The Great Indian Housewives’ என்பதாகும். படத்தில் வரும் காட்சிகளும் அதற்கு தகுந்தாற்போல் உள்ளது. படத்தில் ஜோதிகாவே அதிக ஆதிக்கம் செலுத்துகிறார். படத்தில் அவர் சொல்லும் டயலாக் ‘மனசுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணனும் ,மனசுக்கு பிடிச்சவன் கூட வாழனும் அதுதான் உண்மையான லிபரேஷன் ‘ என்று அவர் சொல்வது நன்றாக இருக்கிறது. படத்தின் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று உள்ளது. இப்படம் பெண்களுக்கான சமர்ப்பணம் என்று சொல்லலாம்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக உள்ளது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு பொருத்தமாக உள்ளது.CS பிரேமின் எடிட்டிங் அருமை.

நடிகர்களும் பங்களிப்பும்

ஜோதிகாவிற்கு 36 வயதினிலே படத்திற்கு பின் இது ஒரு நல்ல படம். தேர்வு செய்து நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் முக்கிய ரோல் ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சீனியர் நடிகைகள் சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி நடிப்பால் நம் மனதை அள்ளுகிறார்கள். நாசர், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1. எதார்தமான,இயல்பான கதை
2. நடிகர்களின் பங்களிப்பு
3. இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1. சில விஷயங்கள் யதார்த்தை மீறி செயற்கையாக தெரிகிறது.

ஒருவரி செய்தி – மகளிர் மட்டும் பெண்களுக்கான முக்கியமாக இல்லத்தரசிகளுக்கான இனிய விருந்து.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *