BREAKING NEWS
Search

ஸ்பைடர் திரைப்பட விமர்சனம்

432

வெளியான தேதி-27-09-17
படம் ஓடும் நேரம் – 2மணி 25நிமிடம்
சென்சார் ரேடிங் –U/A

படக்குழு
கதை திரைக்கதை,இயக்கம்,வசனம்-A.R.முருகதாஸ்
தயாரிப்பு – தாகூர் மது
நடிகர்கள்- மகேஷ் பாபு (புதுமுகம்),ராகுல் பரீத் சிங்,SJ சூர்யா,பரத்,RJ பாலாஜி
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு-சந்தோஷ் சிவன்
எடிட்டிங்-ஸ்ரீகர் பிரசாத்
சண்டை பயிற்சி-பீட்டர் ஹீன்

இந்த படம் எப்படி பட்டது

இந்த படம் ஒரு அக்ஷன் த்ரில்லர் படம், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகிறார். ஸ்பைடர் விரித்த வலையில் யார் மாட்டினார்கள் என்று பாப்போம் வாருங்கள்.

கதை

இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு ஒரு இன்டலிஜென்ஸ் பீயூரோ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது வேலை என்னவென்றால் போன் மூலம் யாரேனும் சதி திட்டம் போட்டு ஏதேனும் தவறு நடக்கபோகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர் இந்த வேலைக்கு அதிக திறமை வாய்ந்தவர். எனவே இது தவிர அப்பாவி மக்கள் யாரேனும் போனில் பேசி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் அவர்களை காப்பாற்றுவார். இதற்கிடையில் ராகுல் பரீத் சிங்குடன்(ஷாலினி) காதல் மலர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சைகோ வில்லனான SJ சூர்யாவின்(சுடலை) சதியை மகேஷ் பாபு கேட்டு அதை முறியடிக்கிறார். இவரையும் மீறி இரண்டு கொலைகள் நிகழ்ந்து விடுகிறது. அதை செய்தது யார், ஏன் இப்படி செய்கிறான் என்பதை கண்டு பிடிப்பதே படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தின் இயக்குனர் AR.முருகதாஸ் இந்த படத்தை ஒரு பைலிங்குவல் படமாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் எடுத்து வெளியிட்டிருக்கிறார். வழக்கமான முருகதாஸ் படம்போல சமூக பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு தன்னுடைய ட்விஸ்டை கொடுத்து மிகவும் நன்றாக எடுத்திருக்கிறார். படத்தின் நாயகன் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படமே பெரிய படம் நல்ல படமாக இருக்கிறது இப்படம் அவருக்கு நிச்சயம் தமிழிலும் ரசிகர் கூட்டம் சேரும். இந்த படத்தில் SJசூர்யா வில்லனாக நடித்துள்ளார். அவரே படத்திற்கு பெரிய பலம். அவரின் அறிமுக காட்சியிலேயே மிடுக்காக வந்து அனைவரின் கைத்தட்டலயும் பெறுகிறார். முருகதாஸ் இப்படத்தில் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான சண்டையை ஹீரோ வில்லன் சேஸ் கான்செப்டை வைத்து எடுத்திருந்தாலும் அதையும் புதுமையாக சொல்லியிருக்கிறார். வில்லன் SJ சூர்யா படத்தின் இடைவேளைக்கு கொஞ்சம் முன்பே அறிமுகமாகிறார் பின் படம் முழுவதுமே அவரது சாம்ராஜியம்தான். அவர் ஏன் அப்படி ஆனார் என்பதை சொல்லும் பிளாஷ்பேக் கதை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. ராகுல் பரீத் சிங் படத்திலோர் அப்பாவி பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தில் முருகதாசின் சஸ்பென்சான மற்றும் சர்ப்ரைசான திரைகதை நம்மை இருக்கையில் கட்டி போடுகிறது.
இப்படத்தில் ரொமண்டிக் காட்சிகளும் நன்றாக அமைந்திருக்கிறது. எமோஷன் காட்சிகளும் நம்மை பீல் பண்ண வைக்கிறது. என்ன ஒன்று படத்தின் முடிவு கொஞ்சம் போராக இருக்கிறது. மற்றபடி இது நல்ல ரொமாண்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அவரது பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது ரோலர் கோஸ்டரிலும் ஆஸ்பத்திரியிலும் நடக்கும் சண்டை காட்சிகளையும் மற்றும் பாடல் காட்சிகளையும் மிகவும் நன்றாக எடுத்திருக்கிறார். ஸ்ரீகரின் எடிட்டிங்கும் நன்றாக உள்ளது.

நடிகர்களும் பங்களிப்பும்

மகேஷ் பாபு இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்,ஒரு சில இடங்களில் லிப் சிங்க்காக்கவில்லை மற்றபடி அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது. SJ சூர்யா ஒரு பவர்புல் வில்லனாக நடித்திர்க்கிறார். பெரிய கேரக்டரை மிகவும் லாவகமாக கையாண்டிருக்கிறார். அவரே படத்தின் பலமாகவும் இருக்கிறார். அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ரகுல் பரீத் சிங் நமக்கு ஏற்கனவே பரிச்சியமானவர்தான். ரொமான்ஸ் காட்சிகளிலும் இவருக்கும் மகேஷும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. பாடல் காட்சிகளில் மிகவும் நன்றாக இருக்கிறார். RJ பாலாஜி இப்படத்தில் ஒரு சீரியசான ரோல் ஏற்று திறம்பட செய்திருக்கிறார் நன்றாக இருக்கிறது. மற்றும் ஜெயப்ரகாஷ், ராஹுலின் அம்மா கேரக்டர் என்று அனைத்து கேரக்டரும் பொருத்தமாக இருக்கறது.

ஒருவரி செய்தி –ஸ்பைடர் வலையில் சர்ப்ரைஸ் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்துள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *