BREAKING NEWS
Search

திவாகரன் போட்ட வெடிகுண்டு.. நடராஜன் சிகிச்சையில் என்ன நடந்தது.? கூர்ந்து கவனிக்கும் எடப்பாடி!

274

சசிகலா கணவர் நடராஜன் உடல் உறுப்பு தானம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு தமிழக அரசு தலையீடு இருப்பதாக திவாகரன் தெரிவித்துள்ளார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து போனதால் அதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு இன்று காலை உடல் மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனை சென்று நடராஜனை திவாகரன் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

சசிகலாவிற்கு பரோல் வழங்குவதில் சில ஆவணங்கள் விடுபட்டு போனதால் அவருக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஜாமீனில் வெளியே வருவார் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், துண்டு பிரசுரம் வழங்கியதற்காக தினகரன் மீது தேச துரோக வழக்கு ஒன்றை தமிழக அரசு போட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசை நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தினகரன் ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *