BREAKING NEWS
Search

சோலோ திரைவிமர்சனம் – SOLO Movie Review

425

வெளியான தேதி – 05- 10-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 32 நிமிடம்
சென்சார் ரேடிங் – U/A

படக்குழு

கதை திரைக்கதை,இயக்கம், – பீஜாய் நம்பியார்
தயாரிப்பு – அணில் ஜெயின், நம்பியார்
நடிகர்கள்- துல்கர் சல்மான், சாய் தன்ஷிகா, நேஹா ஷர்மா, சுருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ்,
நாசர், சுகாசினி மணிரத்தினம்,
இசை – அபினவ் பன்சல், கோவிந்த் மேனன்,
பின்னணி இசை – பிரஷாந்த் பிள்ளை
ஒளிப்பதிவு – கிரீஷ் கங்காதரன், மது நீலகண்டன், சேஜல் ஷாஹ்

இந்த படம் எப்படி பட்டது

இந்த படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். இதில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. துல்கர் சல்மான் இதில் ஹீரோவாக நான்கு ரோல்கலில் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு கேரக்டரும் உலகின் ஆதாராமாக விளங்கும் நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகியவற்றை சித்தரிக்கிறது. சோலோவின் நான்கு கதைகள் பற்றி பாப்போம் வாருங்கள்.

கதை

இப்படத்தில் ஒன்றுகொன்று தொடர்பில்லாத நான்கு பகுதிகள்.ஒவ்வொரு பகுதியும் ஒரு கதையை சொல்கிறது. துல்கர் சலமான் ஒவ்வொரு பகுதியிலும் ஷேகர் (நீர்), த்ரைலோக் (காற்று), சிவா(நெருப்பு), ருத்ரா(நிலம்), என்று நான்கு வேடத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொன்றாக பாப்போம்.

ஷேகரின் உலகம்: துலகர் சல்மான் ஷேகர் கேரக்டரில் ஒரு கல்லுரி மானவானாக வருகிறார்.இதில் பார்வை தெரியாத பெண்ணாக வரும் சாய் தன்ஷிகாவை(ராதிகா) காதல் செய்கிறார்.இந்த கதை நீரை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட கதை இது . த்ரைலோகின் உலகம்:

த்ரைலோக் ஒரு வெட்டினரி மருத்துவர் இவருக்கு ஜோடியாக இந்த கதையில் நடித்திருப்பவர் ஆர்த்தி வெங்கடேஷ் (அயிஷா). நான்கில் இந்த கதையே மிகவும் சுவாரசியம்மகவும் த்ரில்லிங்காகவும் அமைந்திருக்கிறது. இந்த கதை காற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்டது.

சிவாவின் உலகம்: சிவாவின் கேரக்டரில் அவர் ஒரு தாதாவாக நடித்துள்ளார். பெரிய ரௌடியாக இருந்த தன் தந்தையின் சாவிற்கு காரணமாக இருந்தவரை பழி வாங்கும் இந்த கேரக்டருக்கு ஜோடியாக சுருதி ஹரிஹரன்(ருக்கு) நடித்திருக்கிறார். இந்த கதை நெருப்பை மையம்மாக வைத்து எடுக்கப்பட்டது.

ருத்ராவின் உலகம்: ருத்ரா கேரக்டரில் துல்கர் சல்மான் ஒரு ராணுவ அதிகாரியாக தன் காதலி நேஹா ஷர்மாவிர்காக (அக்ஷரா) காத்திருக்கிறார். இந்த கதையில் காதல், ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கதை நிலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இந்த நான்கு கதைகளும் ஒன்றுகொன்று தொடர்பில்லை ஆனால் ஒரே தொடர்பு என்னவென்றால் நான்கிலும் காதல், எமோஷன், செண்டிமெண்ட், என்று இருக்கறது. இப்படம் பகுதி பகுதியாக முடிவதால் படத்தின் முடிவு அந்த ஆதிசிவன் பற்றியது என்றே சொல்லலாம்.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இந்த படத்தின் இயக்குனர் பீஜாய் நம்பியார் இதற்கு முன் டேவிட் மற்றும் சைத்தான் படங்கள் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர். இவர் கதையில் ஒரு வித்யாசம் இருக்கும் இந்த படத்திலும் அப்படியே ஒரு படத்தில் நான்கு கதையை சொல்லியிருக்கிறார். கதை ஒன்றுகொன்று தொடர்பில்லாமல் நன்றாக திரைகதை அமைத்திருக்கிறார்.

படத்தில் நமக்கு இன்றியமையா பொருளான நீர், காற்று, நிலம், நெருப்பு ஆகியவையை மைய்யாபடுத்தி நான் கேரக்டரையும் அதோடு சம்பந்தப்படுத்தி அருமையாக திரைகதை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு அவரை பாராட்ட வேண்டும்.

சிவா மற்றும் த்ரைலோக் கேரக்டர் அனைவர் மனதிலும் மதியும் கேரக்டராக அமையும். படத்தில் காதல் காட்சிகள் அருமை. ஒவ்வொரு கதையிலும் துணைநடிகர்களாக நடித்தவர்கள் நிறைய உள்ளனர் நன்றாகவும் நடித்திருக்கின்றனர்.

படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. துல்கர் சல்மானுக்கு இது மூன்றாவது நேரடி தமிழ் படம். இந்த படம் அவருக்கு மாசாக அமையும். நடிகைகள் நான்கு பேர் முக்கிய
வேடத்தில் நடித்துள்ளனர் கதைக்கு பொருத்தமாக நடித்துள்ளனர். படத்தில் அடுத்து என்ன என்ற
விறுவிறுப்பு அதிகம் உள்ளது படம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த படம் துல்கர் சல்மானுக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். இது ஒரு நல்ல த்ரில்லிங்கான படம்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

இப்படத்தின் 22 பாடல்களுக்கு 12 பேர் இசை அமைத்திருகின்றனர். பாடல்கள் நன்றாக உள்ளது.
பின்னணி இசை பிரஷாந்த் பிள்ளை மிகவும் நன்றாக அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு கிரீஷ் கங்காதரன், மது நீலகண்டன் மிகவும் நன்றாக செய்திருகின்றனர். இப்படத்தின் கலை இயக்குனர் அமரன் குறிப்பிட்டுசொல்லத்தக்கவர்.

நடிகர்களும் பங்களிப்பும்

இப்படத்தில் துல்கர் சல்மான் நான்கு சவாலான கேரக்டர்களை மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
அரங்கில் இவருக்கு கைத்தட்டல் பரப்பது நிச்சயம். நான்கு கதாநாயகிகளில் சாய் தன்ஷிக்கவிக்றகே நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, அவரும் மிக நன்றாக நடித்திருக்கிறார். மற்ற நடிகைகள் ஆர்த்தி வெங்கடேஷ், சுருதி ஹரிஹரன், நேகா ஷர்மா ஆகியோர் ஒரு சில காட்சிகளே வந்தாலும் முக்கிய காட்சிகளாக இருக்கிறது. துணை நடிகர் ஒரு பட்டாளமே இருக்கிறது அனைவரும் அவரவர் பங்கிற்கு பலம் சேர்த்துள்ளனர்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.திரைக்கதை
2.துல்கர் சல்மானின் நடிப்பு
3.பின்னணி இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1.படத்தில் நிறைய பாடல்கள்
2.ஒன்றுகொன்று தொடர்பில்லாத கதைகள்.

ஒருவரி செய்தி –‘சோலோ’ நான்கு படம் பார்த்த அனுபவம்.

ரேடிங்- 2.75/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *