BREAKING NEWS
Search

ரிலீசுக்கு முன்பே பிரபலங்களின் பாராட்டை பெற்ற “பள்ளி பருவத்திலே”

309

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாகவும், நாயகியாக வெண்பா அறிமுகியுள்ள படம் ‘பள்ளி பருவத்திலே’. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் நடிகை வெண்பா.

தஞ்சை மாவட்ட பின்னனியில் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட, காமெடி கலந்த காதல் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வைரமுத்து பள்ளி பருவத்திலேயே படத்தை பாராட்டியுள்ளனர். மேலும் பாரதிராஜா இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அவரது வாழ்த்தை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான் படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானது. அந்த பள்ளியில் படித்த நிறைய பேர் இன்று டாக்டர்கள், வக்கீல், ஆடிட்டர், தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அப்படி உருவாகக் காரணமான ஆசிரியர்தான் சாரங்கன். சாரங்கன் அவர்களின் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்று நடித்திருக்கிறார். அதே மாதிரி ஊர்வசி கதாப்பாத்திரமும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெரும் என்கிறார் இயக்குனர்.

நவம்பர் 3ம் தேதி மீண்டும் பள்ளி பருவத்திற்கு செல்ல தயாராகுங்கள்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *