BREAKING NEWS
Search

மெர்சல் திரைவிமர்சனம்

990

‘மெர்சல்’- திரைப்படம் விமர்சனம்

வெளியான தேதி-18- 10-17
படம் ஓடும் நேரம் – 2 மணி 47 நிமிடம்
சென்சார் ரேடிங் – U/A

படக்குழு

இயக்கம்- அட்லி
கதை திரைக்கதை – அட்லி, K.V.விஜெயேந்திர பிரசாத், ரமண கிரி வாசன்
தயாரிப்பு – ஹேமா ருக்மணி, முரளி ராமசாமி, தேனண்டாள் ஸ்டுடியோ, லிமிடெட்
நடிகர்கள்- விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, SJ சூர்யா, வடிவேல், யோகி
பாபு, நான் கடவுள் ராஜேந்திரன்,
இசை – AR ரஹ்மான்
ஒளிப்பதிவு- GK விஷ்ணு
எடிட்டிங் – ரூபன்

இந்த படம் எப்படி பட்டது

விஜய் மூன்று வேடங்களில் நடித்து இயக்குனர் அட்லி இயக்கியிருக்கும் படம் மெர்சல். மூன்று
விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருக்கும்
இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்போம் வாருங்கள்.

படத்தின் விமர்சனம்

கடந்த ஆண்டு நல்ல கமர்ஷியல் படமே வரவில்லை. அதற்கு விருந்தாக மெர்சல் படம் வந்திருக்கிறது. இந்த படத்தை அட்லி இயக்கி இருக்கிறார். சகோதரர்களான மேஜிஷியன் விஜய் மற்றும் டாக்டர் விஜய்யை சுற்றி கதை நகர்கிறது. பிளாஷ்பேக்கில் அப்பா விஜய் நம்மை மிரளவைக்கிறார். நடிகர் விஜய் மூன்று வேடங்களில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து கொடுத்திருக்கிறார். அதில் அப்பா விஜய் கேரக்டர் நம்மை மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இப்படத்தில் செண்டிமெண்ட், திரில், சஸ்பென்ஸ், எமோஷன், காதல், ஆக்ஷன், விறுவிறுப்பு என்று அனைத்துமே உள்ளது. இப்படத்தை இயக்குனர் அட்லி மிகவும் மாசாக எடுத்திருக்கிறார்.

படத்தில் நடிகர் விஜய் ‘ஒரு தலைவன் உருவாவதற்கு ஒரு யுகமே தேவைபடுகிறது’ என்று பஞ்ச் டயாலக் பேசியிருக்குறார். படத்தின் திரைக்கதையில் நல்ல விறுவிறுப்பு இருக்கிறது. கதாபாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி காட்சியமைப்பு நன்றாக வந்திருக்கிறது. ரொமான்சுக்கு மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இடைவேளைக்கு முன்பான 80 களில் வரும் அப்பா விஜயின் இன்ட்ரொடக்ஷன் காட்சி பிளாஷ்பேக் காட்சிகள் சண்டை காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைகிறது மனதை கவர்கிறது. படத்தில் முழுக்க முழுக்க விஜய்யே நிறைந்திருக்கிறார். அவரை எடுத்துவிட்டு படத்தை பார்த்தால் அங்கே ஒன்றும் இருக்காது. விஜயின் மெர்சல் படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து என்றே சொல்லவேண்டும். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் இன்றைய மத்திய, மாநில அரசுகளை வெளுத்து வாங்குகிறது.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

அட்லியுடன் சேர்ந்து இப்படத்தை KV விஜயேந்திர பிரசாத் திரைகதை அமைத்து கதை எழுதியுள்ளார். நன்றாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை AR ரஹ்மான் அமைத்துள்ளார். அதுவும் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லவேண்டும். GK விஷ்ணுவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது, ரூபனின் எடிட்டிங்கும் நேர்த்தியாக உள்ளது.

நடிகர்களும் பங்களிப்பும்

நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்திருக்கிறார். அவர் திறமையை நிரூபிக்கும் சவாலான கேரக்டர்களை நன்றாக செய்திருக்கிறார். SJ சூர்யா மருத்துவராகவும் அவரே மிரட்டலான வில்லனாகவும் நடித்திருக்கிறார். மூன்று நாயகிகள் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து தங்கள் வேலையை இனிதே செய்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் நடிகர் வடிவேலு விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார் அவர் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. மற்றும் படத்தில் நடித்துள்ள அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1. கதை, திரைக்கதை
2. விஜய்
3. AR ரஹ்மானின் இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1. படம் ஓடும் நேரம் அதிகம்

ஒருவரி செய்தி – ‘மெர்சல்’ முப்பரிமாணத்தில் நம்மை மிரளவைக்கிறது.

ரேடிங்- 3/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *