BREAKING NEWS
Search

இப்படை வெல்லும் திரைவிமர்சனம்

305

இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கிறார். உடன் பணிபுரியும் மஞ்சிமா மோகனை காதலிக்கிறார். இவர்கள் காதலை மஞ்சிமாவின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் எதிர்க்கிறார்.

உதயநிதியின் அம்மா ஒரு பஸ் ஓட்டுனர் ஒரு மகன் மற்றும் இரு மகள்களுக்கு பொறுப்புமிக்க தாயாக வாழ்வின் எதார்த்தங்களை சொல்லியே தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்.

இதற்கிடையில் காவலில் இருந்து தப்பும் தீவிரவாதியான டானியல் பாலாஜி தான் செய்யும் ஒரு சட்ட விரோத செயலில் உதயநிதி மற்றும் சூரியை தெரிந்தோ தெரியாமலோ மாட்டிவிடுகிறார். இதிலிருந்து இவர்கள் தப்புவதே இப்படை வெல்லும் கதை.

படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் கோர்வையாகவும் உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் ஓட ஆரம்பித்த உதயநிதி பட்த்தின் க்ளைமேக்ஸ் வரை ஓடிக் கொண்டே இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அவரவர் பங்கிற்கு பலம் சேர்த்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் ஆக்ஷனில் இறங்கியிருந்தாலும் அவருக்கு அவர் நடித்த மற்ற படங்கள் போலவே சாப்டான கேரக்டர்தான். மஞ்சிமாவுடனான காதல், தன் மீது விழுந்திருக்கும் பழி, குடும்ப சூழ்நிலை இவற்றையெல்லாம் லாவகமாக கையாண்டிருக்கிறார்.

மஞ்சிமா மோகன் தன் காதலனுடன் சேர எடுக்கும் முயற்சிகள் இம்ப்ரசிவாக உள்ளது குறிப்பாக தன் அண்ணனை எத்ர்பது.

ராதிகா ஒரு பஸ் ஓட்டுனராக பொறுப்புமிக்க தாயாக வந்து பெற்ற பிள்ளைகளை முதலில் நம்பவேண்டும் என்று மெசேஜ் சொல்லியிருக்கிறார். இவர் சென்டிமெண்டில் நம் உள்ளம் கவர்கிறார்.

படம் போரடிக்காமல் போகிறது அதற்கு காரணம் சூரியின் காமெடியே. அவர் உதயநிதியுடன் சேர்ந்து கலகலப்பை கூட்டியிருக்கிறார்.

மேலும் ஒரு பக்கம் காமெடியாகவும், த்ரில்லிங்காகவும் திரைக்கதை நகர்ந்தாலும், சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ரோகினி கர்ப்பிணியாக அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை தொப்புள் கொடி சுற்றியிருக்கு என்று கூறி சூரியிடம் அழும் காட்சியில் தாய்மையின் வலியை கண் முன்னே நிறுத்துகிறார்.

படத்தின் வில்லனான டேனியல் பாலாஜி தான் எப்படி போலீசிடம் இருந்து தப்பித்தார் பின் எப்படி மாட்டிக்கொண்டார் என்று அழுத்தமாக சொல்லப்படவில்லை. ஆனால் அவர் தன் அடுத்தடுத்த ப்லான்களால் உதயநிதி சூரி மற்றும் போலிசை சுற்ற விடுவது அருமை.

படத்திற்கு D.இம்மான் இசையமைத்திருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை. பாடல்கள் மனதில் பதிவது சந்தேகம்தான்.

மொத்தத்தில் காதலும் காமெடியும் செண்டிமெண்டும் கலந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.

படத்தின் ப்ளஸ்

1.நடிகர்களின் பங்களிப்பு
2.திரைகதையில் கோர்வை
3.காமெடி அருமை

படத்தின் மைனஸ்

1.சீரியசான கதை சிம்பிளாக முடிந்ததது.

ஒருவரி செய்தி – ‘இப்படை வெல்லும்’ நிச்சயமாக வெல்லும்.

ரேடிங்- 3.25/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *