BREAKING NEWS
Search

தீரன் அதிகாரம் ஒன்று – திரைவிமர்சனம்

354

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு ஒரு நல்ல சினிமா வழங்குவதில் கைதேர்ந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி போலிஸ் ட்ரைனிங்கில் நல்ல ரேங்க் வாங்கி போலிஸ் அதிகாரியாகிறார். அவர் தன பக்கத்து வீட்டில் இருக்கும் ராகுல் பரீத் சிங்கிடம் காதல் கொள்கிறார் இந்த காதல் பின் திருமணத்தில் முடிகிறது,

இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பல் கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. பிறகு தான் தெரிகிறது அந்த கும்பல் இந்தியா முழுவதிலுமே தன் கைவரிசையை காட்டியுள்ளது என்று.

இந்த கேஸ் கார்த்தியின் கைக்கு விசாரணைக்கு வருகிறது அதன் பின்தான் படத்தில் சூடு பிடிக்கிறது. இந்த கொள்ளையர்கள் யார்? இவர்கள் இவ்வாறு செய்ய காரணம் என்ன? கார்த்தி இவர்களை எப்போது எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

படத்தின் விமர்சனம்

படத்தின் இயக்குனர் H. வினோத் இந்த படத்தை சின்சியர் காவலர்களுக்கான சமர்பணமாக இயக்கியுள்ளார். 1995 முதல் 2005 வரையிலான தமிழகத்தில் நடந்தேறிய கொடூர கொலை கொள்ளை ஆகிய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்திற்கு கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் திரைக்கதையில் திருப்பங்களும் பரபரப்பும் மிகுந்துள்ளது. கார்த்தியின் கைக்கு அந்த கேஸ் வந்த பிறகு படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

நடிகர் கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் மாசான போலிசாக வந்து கலக்கினார். இந்த படத்தில் தீரன் என்ற பெயரில் ஒரு க்ளாசான சின்சியர் போலிசாக அசத்தியிருக்கிறார். படத்தின் முன்பாதியில் ராகுல் பரீத் சிங்குடன் ரொமாண்டிக்காகவும் கலகலப்பாகவும் கலக்கியிருக்கிறார்.

ராகுல் பரீத் சிங் இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த மற்ற தமிழ் படங்களை விட இந்த படத்தில் இவருக்கு கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்புள்ள அழுத்தமான கேரக்டரை இயக்குனர் கொடுத்திருக்கிறார். அவரும் அவரால் இயன்ற அளவு நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அபிமன்யு சிங் வில்லனாக அந்த கொள்ளை கூட்ட தலைவனாக நடித்திருக்கிறார். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்று இவருக்கு ஒரு கதை இருக்கிறது. போஸ் வெங்கட் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு சத்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இவர் ராஜஸ்தான், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு கதையோடு சேர்த்து நம்மையும் அழைத்து சென்றிருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. படத்தில் திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சியில் ஆக்ஷன் காட்சிகள் மிக அருமையாக உள்ளது குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டை.

மொத்தத்தில் ஆக்ஷன், த்ரில்லிங், சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பான படம்.

படத்தின் ப்ளஸ்
1.கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதம்
2.கார்த்தியின் பரபரப்பான நடிப்பு
3.சண்டை காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்
1.ராகுல் பரீத் சிங் வரும் ஒரு சில காட்சிகள் மட்டும் படத்தோடு ஒட்டவில்லை

ஒருவரி செய்தி – ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வீர தீர செயல்

ரேடிங்- 3.5/ 5



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *