BREAKING NEWS
Search

80 களின் பிரபலங்கள் 8 வது ஆண்டாக ஒன்று கூடல் நிகழ்ச்சி

373

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் எண்பதுகளில் திரையுலகை கலக்கிய தென்னக திரை பிரபலங்கள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். எட்டாவது ஆண்டாக இந்த ஆண்டு அவர்கள் தங்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் உள்ள ரிசாட்டில் கொண்டாடினர். இந்நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17, 18 தேதிகளில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகை சுகாசினி, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் நடிகர் ராஜ்குமார் சேதுபதி உபசரித்தனர். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு கேரளா, ஹைதிராபாத், பெங்களுரு மற்றும் மும்பையில் இருந்தும் பிரபலங்கள் வந்தனர். நிகழ்ச்சியில் ஒரு அரங்கம் அமைத்து 1960 – 70 களில் வெளியான ஹிந்தி பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடினார்கள் அதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராமப் வாக்கும் நடைபெற்றது இதில் நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது.

கலகலப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஊதா நிற உடையே அணிந்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக அவர்கள் தங்கியிருந்த இடமே ஊதா நிற மலர்கள் மற்றும் அலங்கார போருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட 28 பேரும் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துகொண்ட பின்பு 19 ஆம் தேதி அவரவர் இடங்களுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்களுக்கும் சென்றனர்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *