BREAKING NEWS
Search

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் – வைரல் வீடியோ

1821

கால்பந்து போட்டியின் போது, பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜவஹர்லால உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த வியாழன் அன்று சென்னை எஃப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

அப்போது பார்வையாளர் மாடத்தில் வரிசையாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அமர்ந்து, போட்டியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது நீல நிற ஆடை அணிந்த இளைஞர்கள், அவர்களுக்கு முன்பாக நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இதனை எதேச்சையாக மைதான கேமராவும் படம் பிடித்துள்ளது. இந்த சூழலில், இளைஞர் ஒருவர் ஆபாசமான சைகையை பெண்ணிடம் காட்டியுள்ளார். இதனால் அப்பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். அவர்களுடன் அமர்ந்திருந்த நபர், அந்த இளைஞரை தடுக்க முயற்சித்தார். பின்னர் அந்த இளைஞர் தனது பின்புறத்தை காட்டி, ஏதோ தவறான சைகை காட்டியுள்ளார். இதையடுத்து அவரை அப்பெண் தள்ளியுள்ளார்.

உடனே அவரை, நண்பர்கள் அழைத்துச் சென்று விட்டனர். இந்த வீடியோ Indian Football Team- For World CUP என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து, கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Disgusting Behaviour against Girls from North-East India during ISL Game in Chennai. The horrible part is that other people are standing right there and enjoying the mockery while the Girl herself had to push away the hooligan. Ask yourself, after being teased in such a manner, will they ever come back to the Stadium ? One moment we talk about unity in diversity and the next moment we are harrassing our own countrymen ! Few days ago, in Bengaluru, Mumbai City FC player Emana, who is of African decent, was targeted and Racial slurs were used against him…..I myself have witnessed Racial Taunts being hurled at African players during Mohun Bagan's Calcutta Football League Matches . Hope, our Countrymen realize , this Racism is not a joke, they are not being funny. When we can raise our voice and show concerns when Indians get racially discriminated in Europe and USA… then why doesn't it bother us that our own people are getting mocked and racially discriminated in their own country ? :/ How long will it take us to get rid of this Hate ?

Posted by Indian Football Team- For World CUP on Thursday, 23 November 2017



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *