BREAKING NEWS
Search

தனது அடுத்த படத்தை துவங்கினார் ஹிப் ஹாப் தமிழா ஆதி

214

ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது அடுத்த படத்தை துவங்கினார். இந்த படத்தில் இவர் ஒரு ஹாக்கி ப்ளேயராக வளம் வர உள்ளார்.

இயக்குனர் சுந்தர்.C யின் ‘ஆம்பள’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. அதன் பின் பல படங்களுக்கு இசையமைத்தார். பின் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் புது அவதாரம் எடுத்தார். அந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்போது அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இப்போது அவர் தனது அடுத்த படத்தை துவங்கி உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்குகிறார். இந்த படத்தையும் சுந்தர்.C தனது ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆதி ஒரு ஹாக்கி ப்ளேயராக வளம் வர உள்ளார். இந்த தகவலை சுந்தர். C யின் மேனேஜர் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில், ஹீரோயின் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று (14.12.2017) சென்னையில் துவங்கியது. படத்தின் ஷூட்டிங்கை சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு (2018) விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *