BREAKING NEWS
Search

நேரடி மலையாள படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த சிவகார்த்திகேயன்

318

‘வேலைக்காரன்’ படத்திற்கான ப்ரெஸ் மீட் நேற்று கொச்சியில் நடிபெற்றது அப்போது பேசிய சிவகார்த்திகேயன் தான் நேரடி மலையாள படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், சினேஹா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், RJ.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படத்திற்கான ப்ரெஸ் மீட் நேற்று கொச்சியில் நடிபெற்றது அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “மோகன்லால், மம்மூட்டி, பகத் ஆகியோர் நடித்த நிறைய மலையாள படங்களை நான் பார்த்திருக்கிறேன். பகத் ஒத்துகொண்டால் அவருடன் நேரடி மலையாள படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் அவர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பற்றி பேசும்போது, “அனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் எனது நிறைய படங்களுக்கு அவர்தான் இசையமைத்துள்ளார். நானும் அவரும் சகோதரர்கள் போல. கம்போசிங் செய்யும்போது நான் உடனிருக்க மாட்டேன் ஏனென்றால் அவர் எனக்காக மிக நல்ல ட்யூன்களை போட்டு தருவார். ‘வேலைக்காரன்’ படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகும் வரை அனிருத் உறங்க மாட்டார்” என்று வெகுவாக பாராட்டினார்.

‘வேலைக்காரன்’ படம் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *