BREAKING NEWS
Search

உள்குத்து திரைவிமர்சனம்

442

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான தினேஷ் மற்றும் நந்திதா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம்தான் உள்குத்து. திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இப்படம்.

மீனவர் குப்பத்தில் வசிக்கும் நந்திதாவின் அண்ணன் பாலசரவணனுடன் தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடனே தங்கி வேலை செய்கிறார். அதே ஏரியாவில் கந்துவட்டி விட்டு தொழில் நடத்தும் சரத் லோகிதஸ்வா (காக்காமணி) மகன் திலீப் சுப்பராயனுடன் (சரவணன்) ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

தினேஷுக்கும் திலீப் சுப்பராயனுக்கும் இடையே இருக்கும் பகை அதன்பின் நட்பாக மாறுகிறது. பல கொலைகளை செய்த திலீப் சுப்பராயனை போலீஸ் என்கவுண்டர் செய்யப் போவதாக தகதல் வர உடனே அவர்களிடமிருந்து தப்பி தினேஷ் இருக்கும் குப்பத்துக்குள் நுழைந்துவிடுக்கிறார். அங்கே தினேஷ் திலீப் சுப்பராயனை காப்பாற்றி படகில் கடலுக்குள் கூட்டி செல்கிறார். தன்னை தினேஷ் காப்பாற்றியதாக நினைத்துக் கொண்டு அவருக்கு நன்றி சொல்லும்போது திலீப் சுப்பராயனை கத்தியால் குத்தி போட்டுத்தள்ளுகிறார் தினேஷ்.

தன் மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் சரத் லோகிதாஸ்வா மகனை கொன்றவர்களை கண்டுபிடிக்கும் வேலையை தினேஷிடமே கொடுக்கிறார். திலீப் சுப்பராயனை தினேஷ் ஏன் கொன்றார் என்பதற்கு வலுவான காரணத்தையும் பிளாஷ்பேக்கில் கூறியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

சுறா சங்கராக பால சரவணன் இந்த படத்தில் அதிக இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். தினேஷ் செய்யும் ஒவ்வொரு அதிரடி செயலையும் பார்த்து அதற்கு அவர் கொடுக்கும் ரியால்ஷன்ஸ் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.

நந்திதா மீண்டும் ஒரு யதார்த்த நடிப்பையும் அழகான புன்னகையும் வைத்து அசத்தியிருக்கிறார்.

தினேஷ் நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை, சண்டை காட்சி முதல் ரொமான்ஸ் காட்சிகள் வரை ஒரே ரியாக்‌ஷ்ன் தான். மற்றபடி செண்டிமென்ட் காட்சிகளை அசால்ட்டாக நடித்துவிட்டு போகிறார் மனுஷன். க்ளைமேக்ஸ் காட்சியில் இவர் பேசும் வசனம் தான் இவருக்கு செட்டாகாத மாதிரி தோணுது.

இசை ஜஸ்டின் பிரபாகரன் மெலடியில் பட்டைய கிளப்பியிருக்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பலம் சேர்க்கிறது.

திருடன் போலீஸ் படத்துக்கு கார்த்திக் ராஜு இயக்கும் இரண்டாவது படம் உள்குத்து. பல தடைகளை தாண்டி ஒருவழியாக திரைக்கு வந்திருக்கும் இந்த படம் ஆடியன்சை ஏமாற்றாது என்பது நன்றாக தெரிகிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *