BREAKING NEWS
Search

வாட்ஸ்அப்பில் சொன்ன ஒரு வார்த்தை.. பரிதாபமாக உயிரைவிட்ட இளம்பெண்.. அப்படி என்ன சொன்னார்?

1163

கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் இளம்பெண் ஒருவர் முஸ்லீம்களை பிடிக்கும் என்று கூறியதால் அவரது உயிர் பரிதாபமாக போயுள்ளது.

சிக்மகளூரை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20), இவருக்கு சந்தோஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் அடிக்கடி வாட்ஸ்அப் மூலமாக தங்களின் மாவட்டத்தில் நடக்கின்ற அனைத்து மதக்கலவரங்கள் பற்றி பேசிக்கொள்வர்.

அது போன்று தன்யாஸ்ரீ தனது நண்பனிடம் பேசும்போது தற்போது கலவரங்கள் நடப்பது எல்லாம் நல்லது கிடையாது என கூறியுள்ளார்.

அது போன்று நிலை இருப்பது நல்லதுதான் என்று சந்தோஷ் கூறியுள்ளான்.
மேலும். அப்படி இல்லையெனில் லவ் ஜிகாத் அதிகமாகிவிடும் என்று கூறியுள்ளார்.

உடனடியாக குறுக்கிட்ட தன்யாஸ்ரீ எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என பதில் தெரிவித்ததால், சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது. நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி அந்த பெண் அனுப்பிய மெசேஜை ஸ்கிரின் ஸாட் எடுத்து தனது நண்பர்களுக்கு அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்.

இதனை கண்ட சிலர் அந்த பெண் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அதிலும் பாஜக பிரமுகரை சேர்ந்த தலைவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்து விட்டு, வேறு மதத்தை சார்ந்த ஆண் படத்துடன் தன்யாஸ்ரீ படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்

இதில் மனவேதனை அடைந்த அந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையால் சிக்மகளூரில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *