BREAKING NEWS
Search

பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் கடமான்பாறை

184

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல்கண்ணன், முல்லை, கோதண்டம், கலக்க போவது யாரு பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *