BREAKING NEWS
Search

வெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா? இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்!

561

அடிக்கிற உச்சி வெயில்ல வீட்டை விட்டு வெளியில போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதா?… அதுமட்டுமில்லாமல் அக்னி வெயிலால் உடம்பெல்லாம் தீயாக கொதிக்குதா?… இதுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு முறை குளிச்சா மட்டும் போதாது. வெயில் பட்ட இடமெல்லாம் தோல் வெந்தது மாதிரி எரிச்சல் இருக்கும்.

அதுக்கு கண்ட ஆயின்மென்ட் வாங்கி தடவிக்கிட்டு இருப்போம். அதெல்லாம் இனி பண்ணாதீங்க… அப்புறம் என்னதான் பண்றதுன்னு கேட்கறீங்களா?… இதோ வீட்ல இருக்கிற சின்ன சின்ன பொருள்களை வெச்சே அந்த காயங்களை சரி செஞ்சிடலாம்?

ஐஸ் பேக்

சம்மர் வெயில்ல எப்பவுமே நம்ம வீட்ல ஐஸ் வெச்சிருப்போம். அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து வெயில் சுட்ட, காயங்கள் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்க. ரத்தம் வெளியேறாமல் உறையும். பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக ஐஸ் பேக்குகளை வைக்காதீர்கள். ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் சுற்றி, அதன்பின் ஒத்தடம் கொடுங்கள்.

தேன்

தேன் ஒரு சிறந்த மாய்ச்சரைஸராகப் பயன்படும். இது வெயிலால் உண்டாகும் தழும்புகள் மற்றும் சருமத்தில் உண்டாக்கும் வீக்கங்களையும் போக்கும் ஆற்றல் கொண்டது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த ஆன்டி பாக்டீரியலாக செயல்படுகிறது. இது சூரியனின் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சலையும் சரும பாதிப்புகளையும் சரிசெய்கிறது. ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை ஒரு காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். பாதிக்கப்பட்ட இடத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து தடவி, உலர விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு சருமத்தை அலசுங்கள்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது. மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்துவிட்டு, வெள்ளைக்கருவை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்யுங்கள். சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும். வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல் இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *