BREAKING NEWS
Search

17 வயது இளம் நடிகருடன் கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த பிரபல நடிகை

1253

தனது மகனாக நடித்த வாலிபரை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த விவகாரத்தில் பிரபல நடிகை ஆசியா அர்ஜெண்டோ சிக்கியிருப்பது ஹொலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாக சினிமாவில் நடிகைகள் மீது பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இது இந்திய சினிமாவில் மட்டுமல்ல ஹொலிவுட் சினிமாவிலும் தான்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்காக முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் இருந்தது. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதன்மையாக இருந்தவர் நடிகை ஆசியா அர்ஜெண்டோ. தற்போது இவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு எழுந்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகர் ஜிம்மி பென்னட். இவருக்கு வயது 17 மட்டுமே.

‘The Heart is Deceitful Above All Things’ என்ற படத்தில் ஆசியா அர்ஜெண்டோவும், அவருக்கு மகனாக ஜிம்மி பென்னட் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். அந்த படம் 2004ம் ஆண்டு வெளியானது. 4 வருடங்களுக்கு முன்பு அவரை ஒரு உணவக அறைக்கு வரவழைத்த அர்ஜெண்டோ, ஜிம்மிக்கி தான் எழுதிய காதல் கடிதங்களை காட்டி, அவரை வற்புறுத்தி உடலுறவு வைத்துள்ளார்.

இது மனதளவில் ஜிம்மியை பெரிதாக பாதித்ததாக தெரிகிறது. சினிமா துறையிலும் முழுதாக அவரால் ஈடுபட முடியவில்லை. இதனால், 4 வருடங்கள் கழித்து தற்போது அர்ஜெண்டோ தனக்கு 3.5 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஜிம்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவ்வளவு கொடுக்க முடியாது எனக்கூறிய அர்ஜெண்டோ, 3,80,000 டொலர்களை கொடுத்துவிட்டு நீதிமன்றத்திலேயே பிரச்சனையை தீர்த்துவிட்டார்.

ஆனால், அந்த சிறுவனுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை. அவனுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே பணம் கொடுத்தேன் என வெளியே கூறி வருகிறாராம் அர்ஜெண்டோ…



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *