BREAKING NEWS
Search

திருமணதிற்கு பின் இப்படி மாறிவிட்டாரா நடிகை அசின் – இவ்வளவு பெரிய மகளா இவருக்கு??? புகைப்படம் உள்ளே!

16

நடிகை அசினின் குடும்பப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களுடன் நடித்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அசின் திரைப்படங்கள் வெளியாகாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அசின் மகளின் ஒன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை அசின் மற்றும் ராகுல் சமூக வலையதளங்களில் வெளியிட்டுள்ளனர். முதல்முறையாக தங்கள் மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த குட்டிக்கு அரின் என்று பெயர் வைத்துள்ளனர்.

அரினுக்கு ஒரு வயது தான் என்றாலும் பார்க்க பெரிய பிள்ளை போன்று இருக்கிறார். ஏன் இவ்வளவு வேகமாக வளரணும் என்று கேட்டு மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராகுல் சர்மா.

முன்னதாக அசினுக்கு குழந்தை பிறந்த தகவலை தெரிவித்து குட்டிப் பாப்பாவை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அக்ஷய் குமார். ஆனால் அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகமே தெரியவில்லை. அசினின் மகளை பார்க்க அவரின் ரசிகர்கள் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *