BREAKING NEWS
Search

நெஞ்செரிச்சலை உடனே போக்கக் கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்..

197

நெஞ்செரிச்சல் பலருக்கு இருக்கின்ற பொதுவான ஒரு பிரச்சினை ஆகும். இதை சரி செய்வதற்கு பல வித ஆயுர்வேத கை வைத்தியங்கள் உள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு சில முக்கிய மூலிகைகளை வைத்தே நெஞ்செரிச்சலை நாம் குணப்படுத்திவிடலாம் நாம் உட்கொள்ளும் உணவு தான் நெஞ்செரிச்சலை நமக்கு உண்டாக்குகின்றது. குறிப்பாக செரிமான கோளாறு நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படுது போன்ற அறிகுறிகள் இதனால் தென்படும்

ஏலக்காய்….!

நீரில் 2 ஏலக்காயை கசக்கிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும் இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்திவிடலாம்.

துளசி….!

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மூலிகைகளில் துளசி முதன்மையானது. 6 துளசி இலைகளை மென்றால் நெஞ்செரிச்சல் பறந்து போய்விடும். இவை வயிற்றில் உண்டாகக் கூடிய வாயுக்களை தடுத்து வயிற்றுப் பகுதியில் எரிச்சல் ஏற்படாதவாறு காத்துக் கொள்கின்றது.

புதினா டீ….1

சிறிது புதினா இலைகளை நறுக்கிக் கொள்ளவும் 1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் புதினாவை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய பின்னர் இதை குடித்தால் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.

இளநீர்….!

தினமும் 1 இளநீர் குடித்தால் மிக விரைவிலே நெஞ்செரிச்சலை குணப்படுத்திவிடலாம். மேலும் நெஞ்சுப் பகுதியில் ஏற்படக் கூடிய அமிலத் தன்மையையும் இது குறைத்து விடுகிறது.

கிராம்பு….!

நெஞ்செரிச்சலை உடனே குணப்படுத்த கிராம்பு 1 போதும் இவை எக்சினை அதிகம் உற்பத்தி செய்து செரிமான கோளாறை தடுக்கிறது. எனவே நெஞ்செரிச்சல் தானாகவே குணமடைந்துவிடும். இதற்கு ஒரு கிராம்பை சிறிது கடித்து வாயில் வைத்துக் கொண்டாலே போதும்.

வாழைப்பழம்….!

மலச்சிக்கல் உடல் பருமன் போன்ற பிரச்சினைக்கு எப்படி இந்த வாழைப்பழம் உதவுகின்றதோ அதே போன்று நெஞ்செரிச்சலுக்கும் இது பயன்படுகிறது. பொட்டாசியம் இதில் அதிகம் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை பாதுகாக்கின்றது. பழுத்த வாழைப்பழம் 1 சாப்பிட்டாலே நெஞ்செரிச்சல் குணமாகிவிடும்.

சீரக நீர்….!

செரிமானப் பிரச்சினையை தீர்ப்பதோடு உடலின் செயற்பாட்டை சீராக வைத்துக் கொள்ள சீரகம் பெரிதும் உதவுகிறது. 1 ஸ்பூன் சீரகத்தை கொதிக்க வைத்த நீரில் போட்டு குடித்து வந்தாலே நெஞ்செரிச்சலுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்.

கற்றாழை சாறு….!

காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் கற்றாழை சாற்றை சிறிதளவு குடித்தாலே போதும் மிக விரைவில் நெஞ்செரிச்சலை சரி செய்துவிடலாம்.

நெல்லிக்காய்….!

விட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் உள்ளதால் இது போன்ற பிரச்சினையை எளிதில் தீர்க்க கூடும். நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் 1 நெல்லிக்காயை சாப்பிடு வரலாம். அல்லது நெல்லிக்காய் ஜோஸ் அரை கப் குடிக்கலாம்.

இஞ்சி….!

மூலிகை தன்மை அதிகம் இஞ்சியில் இருக்கிறது. அந்த வகையில் சிறிது இஞ்சியை சுடு நீரில் நசுக்கிப் போட்டுக் குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகிவிடும்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *