BREAKING NEWS
Search
அதாகப்பட்டது மகாஜனங்களே திரைவிமர்சனம்

அதாகப்பட்டது மகாஜனங்களே திரைவிமர்சனம்

236

ஒரு திருட்டும் அதனை சுற்றி நடக்கும் கதைதான் இந்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஒன் லைன் கதை.

படத்தின் நாயகன் உமாபரதி அவரின் நண்பருக்கு உதவி செய்ய நரேனின் வீட்டிற்கு 3 மணி நேரம் செக்யூரிட்டியாக இருக்க ஒப்புக் கொள்கிறார். இந்த நேரம் பார்த்து திருடர்கள் அந்த பங்களாவிற்குள் நுழைந்து திருட முயற்சிக்கிறார்கள். நண்பனுக்காக உதவி செய்ய வந்து பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளும் உமாபாரதி ஒரு கிதாரிஸ்ட்.

செக்யூரிட்டியாக இருக்க சென்ற இடத்தில் நாயகன் அவரின் கிதாரை தொலைத்துவிடுகிறார். எப்படியும் அதை திருடர்கள்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று எண்ணி உமாபாரதியின் நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து சென்னையில் இருக்கும் ரவுடிகளிடம் விசாரிக்க தொடங்குகிறார். ஆனால் யாருமே அந்த கிதாரை பற்றி தெரியவில்லை என்று கூறுகிறார்கள். மேலும் அந்த கிதாரில் நாயகனின் முழு ஜாதகமும் இருப்பதால் அது போலீசிடம் கிடைத்தால் தன்னை குற்றவாளி என நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி பயப்படுகிறார்.

கருணாகரன் பெரிய தைரியசாலி மாதிரி உமாபாரதியிடம் சொல்லி வைக்க கடைசியில் அதுவே கருணாகரனுக்கு ரவுடிகளிடம் செம டோஸ் வாங்க வைத்துவிடுகிறது. நரேன் வீட்டிற்கு திருட வந்த திருடர்கள் எந்த பொருளையும் திருடாமல் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. அப்படியானால் திருடர்கள் எதை திருட வந்தார்கள் என்ற சஸ்பென்ஸ் கேள்விகளோடு திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.

நாயகன் உமாபாரதிக்கு முதல் படம் தம்பி ராமைய்யாவின் மகன் என்ற விசிட்டிங் கார்ட் இருந்தாலும் அவரின் சிபாரிசு படத்தில் இருப்பதாக தெரியவில்லை. முதல் படமே காமெடி சஸ்பென்ஸ். டான்ஸ்சும் அழகாக இருக்கிறது. காமெடியும் நன்றாக வருகிறது. ஆல் டைம் டிரெண்ட்டை கையில் எடுத்துக் கொண்டு கோலிவுட்டின் கதவை தட்டியிருக்கிறார். வாழ்த்துகள்.

அறிமுக நாயகியான ரேஷ்மா அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்துல யாரு வில்லன் என்ற கேள்விக்கு பதில் விமர்சனத்தில் கூற முடியாது. தியேட்டர்ல போய் பாருங்க.

தம்பி ராமைய்யாவுக்கு படத்துல ஒரே ஒரு காட்சிதான். தன் மகன் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றே திருஷ்டிக்கு அந்த காட்சி வைத்திருப்பார்கள்போல. இருந்தாலும் தம்பி ராமைய்யாவை பார்த்ததுமே அடடே என்றுதான் எண்ண வைக்கிறார்.

அந்த திருட்டு கும்பலிடம் மாட்டிக் கொண்டு மனோபாலா படும் அவஸ்தையை பார்க்கும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள் அள்ளுகிறார். முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சியில் பலே பலே…!

இமான் இசையில் பாடல்களை ரசிக்க வைக்கிறார். பின்னணி இசை மட்டும் ஏனோ வானிலை மாறுதே மாதிரி சம்பந்தமே இல்லாமல் அடித்துவிட்டிருக்கிறார் போல. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய ப்ளஸ் என்றுதான் கூறவேண்டும்.

படத்தின் இயக்குனர் இன்பசேகர் பெயரிலேயே இன்பத்தை வைத்துக் கொண்டு படத்தில் காமெடி இல்லைன்னா நல்லாவா இருக்கும். கருணாகரன் முதல் மனோபாலா வரை அனைவரையும் வைத்து நமக்கு நகைச்சுவை விருந்தே வைத்துவிட்டார்.

மொத்தத்தில் “அதாகப்பட்டது மகாஜனங்களே” கவலைகளை மறந்து இரண்டு மணி நேரம் கலகலப்பாக இருக்க சிறந்த படம்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *