BREAKING NEWS
Search
கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம் kootathil oruthan movie review

கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்

243

கதை, திரைக்கதை, இயக்கம் –T.J.ஞானவேல்
தயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
நடிகர்கள் – அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், பாலா சரவணன், ஜான் விஜய், நாசர்,
இசை – நிவாஸ் K.பிரசன்னா
ஒளிப்பதிவு –வர்மா
எடிட்டிங்-லியோ ஜான் பால்

இந்த படம் எப்படி பட்டது

அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த நடித்து டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கும் படமே கூட்டத்தில் ஒருத்தன்.நாம் இப்போது கூட்டத்தில் தனித்து விடப்பட்ட ஒருத்தனை பற்றி பார்ப்போமா.

கதை

இப்படத்தில் அசோக் செல்வன் ஒரு சுமாரான இளைஞன்,மிகவும் பயந்த சுபாவமும் கூச்ச சுபாவமும் மிக்கவாராக இருக்கிறார்.அவர் வகுப்பில் இருப்பவர் கூட அவரை கவனிப்பதில்லை.இதனால் தனக்குள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார்.இப்படி இருக்கும் ஒரு நபருக்கு காதல் மலர்கிறது ப்ரியா ஆனந்துடன்.ப்ரியா ஆனந்தோ இவருக்கு நேர் எதிர் குணங்கள் கொண்டவர். இவர் அசோக் செல்வதின் குணத்தை மாற்றினாரா,இவர்கள் காதல் கைகூடியதா என்பதே படத்தின் முடிவு.

படத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்

இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் பார்த்தோமானால் அது நாம்மில் முக்கால்வாசி பேர் கடந்து வந்தது போல் இருக்கிறது.இருப்பினும் படத்தின் ஹீரோவான அசோக் செல்வனை மிகவும் சுமாரான இளைஞனா மற்றவர்களிடம் பழகுவதற்கு தயங்குவதும் கூச்சம் கொள்வதும் சில சமயம் பயபடுவதும் என்று காட்டியிருப்பது சற்று அதிமாக தெரிகிறது.

ஹீரோவை சுற்றி கதை நகர்கிறது என்கிறபோது அவரின் கேரக்டரை இன்னும் சற்று வலுவாக அமைத்திருக்க வேண்டும்.திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு தேவை.இப்படி சுமாரானவர் ஓரே நாளில் மாறி விட முடியாது என்பதை நன்றாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குனர்.அதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.மேலும் தன் மகனோ மகளோ கஷ்டப்படுவதை பெற்றோர் பொருத்துகொள்வரா.அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் விதம் அருமை.

படத்தில் நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது.படத்தின் பிற்பகுதியில் ஒரு கல்யாண கட்சி அமைந்துள்ளது அதன் பின் நாம் பொறுமையே இழந்து விடுவோம்போல காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்கிறது.காதல் ஒரு மனிதனை எப்படி மற்றும் என்பதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.அதே போலத்தான் இந்தப்படத்திலும், காதலுக்காக தன்னை மாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளும் தோல்விகளும் கண்ணீரும் கலந்து யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் படம்தான் கூட்டத்தில் ஒருத்தன்.

தொழில்நுட்பம் பற்றிய விவரம்

நிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.அதேபோல் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் வர்மாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

நடிகர்களும் பங்களிப்பும்

அசோக் செல்வன் தன் கேரக்டரை உணர்ந்து மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார்.ப்ரியா ஆனந்த் நீண்ட இடைவேளைக்கு பின் தனக்கு கிடைத்துள்ள முக்கியம்மான வேடத்தை சிறப்பாக நடித்துள்ளார்,அவர் நம் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பது நிச்சயம்.பாலசரவணன் அவ்வபோது வந்து சிரிக்கவைத்து செல்கிறார்.அசோக் செல்வனின் தந்தையாக ஒரு ஸ்ட்ரிக்டான தந்தையாக மாரிமுத்து நன்றாக நடித்துள்ளார்.

படத்திற்கு பலம் சேர்ப்பது

1.ஒளிப்பதிவு
2.பின்னணி இசை

படத்திற்கு பலவீனம் தருவது

1.கொஞ்சம் தொய்வான திரைக்கதை
2.அதிகமான செண்டிமெண்ட்

ஒருவரி செய்தி – கூட்டத்தில் ஒருத்தன் நம் பொறுமையை சோதிக்கிறான்.

ரேடிங்- 2.5/ 5Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *